மோர்க்குழம்பு
மோர்க்குழம்பு
தேவையானவை:
வெள்ளை பூசணி - 100 கிராம்
தயிர் - 100 கிராம்
உப்பு - தேவையான அள்வு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
அரைக்க:
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - 5
இஞ்சி - ஒரு துண்டு
தேங்காய்த்துருவல் - 6 டீஸ்பூன்
பச்சைமிளகாய் - நீங்கள் விரும்பும் காரத்துக்கேற்ப
தாளிக்க:
சின்ன வெங்காயம் -10
கடுகு - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
தயிரைக் கடிஅந்து வைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை தோல் நீக்கி சிறிதாக நறுக்கிவைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்ததுள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து நறுக்கிய பூசணிக்காய் சேர்த்து வதக்கவும். இத்துடன் அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். இறுதியாக கடைந்து வைத்துள்ள தயிர் சேர்த்து நுரைத்து வரும் போது இறக்கவும்.

No comments:
Post a Comment