கீரை தோசை
கீரை தோசை
தேவையானவை:
பச்சரிசி - 150 கிராம்
முளைக்கீரை - ஒரு கட்டு
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
கீரையை சுத்தம் செய்துகொள்ளவும். கொதிக்கும் தண்ணீரில் சிறிது சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரைந்ததும் கீரையை அதில் போட்டு மூடி வைக்கவும். பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளவும். இனி பச்சரிசியுடன் கீரை, பச்சைமிளகாய், சீரகம், உப்பு சேர்த்து ரவா தோசை மாவு பதத்துக்கு அரைத்து தோசைக்கல்லில் ஊற்றி, இரு புறமும் வேகவிட்டு எடுத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment