சாம்பார்
சாம்பார்
தேவையானவை:
முருங்கைக்காய் - ஒன்று
கத்திரிக்காய் - 2
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வேகவைத்த துவரம்பருப்பு - ஒரு கப்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
சாம்பார்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக்கொள்ளவும். முருங்கைக்காய், கத்திரிக்காய், தக்காளி முதலியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். வேக வைத்த துவரம் பருப்பில் நறுக்கிய காய்களைச் சேர்த்து உப்பு போட்டு வேகவிடவும். காய்கள் நன்கு வெந்தவுடன் சாம்பார்த்தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்க விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து கறிவேப்பிலை சேர்த்துக் கொதிக்கும் சாம்பாரில் ஊற்றவும். சிறிது கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும்.

No comments:
Post a Comment