பருப்பு
பருப்பு
தேவையானவை:
துவரம்பருப்பு - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவி மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். பிறகு உப்பு சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பருப்பில் ஊற்றிக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

No comments:
Post a Comment