Thursday, 29 September 2016

அரைபுளிக் குழம்பு

அரைபுளிக் குழம்பு

அரைபுளிக் குழம்பு

 

தேவையானவை:

 நறுக்கிய சேனைக்கிழங்கு - கால் கப்

 புளிக்கரைசல் - ஒரு கப்

 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 வேகவைத்த துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 2

 தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

 சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்,

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 பெருங்காயத்தூள் - சிட்டிகை

 கறிவேப்பிலை - தேவையான அளவு

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, சேனைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி, உப்பு சேர்த்து புளிக்கரைசல் ஊற்றிக் கொதிக்கவிடவும். காய் வெந்தவுடன், வேகவைத்த துவரம்பருப்பைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.

 

No comments:

Post a Comment