Monday, 26 September 2016

மஷ்ரூம் எக் ட்ராப்ஸ்

மஷ்ரூம் எக் ட்ராப்ஸ்

மஷ்ரூம் எக் ட்ராப்ஸ்

 

தேவையானவை:

 சிப்பிக் காளான் - 200 கிராம்

 முட்டை - 5

 பெரிய வெங்காயம் - 100 கிராம்

 பச்சைமிளகாய் - 4

 மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கறிவேப்பிலை - சிறிதளவு

 எண்ணெய் (தாளிக்க) - 10 மில்லி

 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை:

சிப்பிக் காளான்களை தண்ணீரில் கழுவி, ஒவ்வொன்றையும் தலா நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக் கொள்ளவும். இப்போது வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, காளான், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து பச்சைவாசனை போகும்வரை நன்கு வதக்கி, இறக்கி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையுடன் ஆறவைத்த காளான் கலவையைச் சேர்த்துக் கிளறவும். பிறகு, கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் பொரிக்கத் தேவையான எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், காளான் கலவையை ஒரு ஸ்பூனில் எடுத்து எண்ணெயில் விடவும். பக்கோடாவைப் பொரித்து எடுப்பதைப் போல் பொன்னிறம் ஆகும் வரை வேகவிட்டு எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

 

குறிப்பு:

கலவையைக் கையால் எடுத்து எண்ணெயில் தூவி விட்டும் பொரித்தெடுக்கலாம். இப்படிச் செய்தால் கையில் முட்டை வாசம் வீசும்.

No comments:

Post a Comment