கேரட் பர்பி
கேரட் பர்பி
தேவையானவை:
துருவிய கேரட் ஒன்றே கால் கப்
துருவிய தேங்காய் ஒரு கப்
சர்க்கரை இரண்டே கால் கப்
நெய் 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்
பாதாம் 5
முந்திரி 5
செய்முறை:
கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து, 2 டீஸ்பூன் நெய் ஊற்றி துருவிய தேங்காய் மற்றும் கேரட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கேரட் வெந்து கலவை ஒன்று சேர்ந்து வாணலியில் ஒட்டாமல் வரும்வரை கிளறவும். இறுதியாக, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறி, கலவை சுருண்டு வந்ததும் இறக்கவும். பிறகு, மீதமிருக்கும் நெய்யை தட்டில் தடவி, பர்பி கலவையைச் சேர்த்து ஆறும் முன்பே துண்டுகள் போடவும். பர்பி மீது முந்திரி, பாதாம் வைத்து அலங்கரிக்கவும். விருப்பப்பட்டால் முந்திரி, பாதாமை நெய்யில் வறுத்து பர்பி மீது வைத்து பரிமாறவும்.

No comments:
Post a Comment