Saturday, 24 September 2016

பாம்பே அல்வா

பாம்பே அல்வா

பாம்பே அல்வா


தேவையானவை:

 

சோள மாவு  அரை கப்

 

சர்க்கரை  ஒன்றரை கப்

 

தண்ணீர்  2 கப்

 

கேசரி பவுடர்  சிறிதளவு

 

முந்திரி  50 கிராம்

 

ஏலக்காய்த்தூள்  சிறிதளவு

 

நெய்  4 டீஸ்பூன்

 

செய்முறை:

 

மைக்ரோவேவ் அவனுக்கான பவுலில் சோள மாவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தண்ணீர், கேசரி பவுடர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து. மைக்ரோவேவ் அவனில் அதிகப்படியான சூட்டில் 6 நிமிடம் வைக்கவும். பிறகு அல்வா கலவையை ஒரு முறை கிளறி, மீண்டும் 4 நிமிடம் வைக்கவும். மீண்டும் கலவையைக் கிளறி அவனில் மேலும் 6 நிமிடம் வைக்கவும். 2 நிமிடத்துக்கு ஒருமுறை கலவையைக் கிளறிவிட்டு பிறகு வேகவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் விட்டு முந்திரியை வறுத்துக் கொள்ளவும். வறுத்த முந்திரியை அல்வா கலவையுடன் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் அவனில் வைக்கவும். நெய் தடவிய தட்டில் அல்வா கலவையைக் கொட்டி, ஆற விடவும். பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

No comments:

Post a Comment