ஆப்பிள் அல்வா
ஆப்பிள் அல்வா
தேவையானவை:
ஆப்பிள் 3 (துருவியது)
நெய் தேவையான அளவு
கேசரி பவுடர் ஒரு டீஸ்பூன்
காய்ச்சிய பால் 2 டேபிள்ஸ்பூன்
பால் பவுடர் 150 கிராம்
சர்க்கரை 150 கிராம்
முந்திரி 10
செய்முறை:
கனமான அடிப்பகுதியுள்ள வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 3 டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியதும், ஆப்பிள் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கவும். ஆப்பிள் நெய்யில் வதங்கியதும் சர்க்கரை மற்றும் பால் பவுடர் சேர்த்து கலவை ஒன்றாகும்வரை நன்கு கிளறவும். பாலில் கேசரி பவுடர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும். பிறகு நெய் ஊற்றி, கலவை வாணலியில் ஒட்டாத பதம் வரும்வரை தொடர்ந்து கிளறவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, நெய்யில் முந்திரியைச் சேர்த்து வறுத்து அல்வாவில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment