எள் உருண்டை
எள் உருண்டை
தேவையானவை:
வெள்ளை எள் - ஒரு கப்
வெல்லம் - அரை கப்
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வெறும் வாணலியில் படபடவென்று சத்தம் வரும் வரை எள்ளை வறுக்கவும். அதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி, பிறகு வெல்லத்தையும் சீவிப் போட்டு அடிக்கவும். இரண்டும் சேர்ந்து வந்ததும் நல்லெண்ணெய் தொட்டு சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும் (பொடியாகவும் நைவேத்தியம் செய்யலாம்).

No comments:
Post a Comment