ஸ்ரீ சாகம்பரி பாத்
ஸ்ரீ சாகம்பரி பாத்
தேவையானவை:
பச்சரிசி - ஒரு கப், நீளவாக்கில் நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி (சேர்த்து) - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்துப்பொடிக்க:
கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
ஒரு கப் அரிசியுடன் 2 கப் நீர் சேர்த்து வேகவிடவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, கொரகொரப்பாகப் பொடிக்கவும். மீதமுள்ள எண்ணெயை அதே வாணலியில் ஊற்றி... காய்கள் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் விடவும். காய்கள் வெந்ததும் சாதத்தைச் சேர்த்துக் கிளறி, பொடித்து வைத்த பொடியைத் தூவவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.
குறிப்பு:
நவராத்திரியில் அம்மனை காய்கறி, பழங்களால் அலங்கரிப்பர். உலக நன்மைக்காக அன்னை ஸ்ரீசாகம்பரி காய்கள், பழங்கள், தானியங்களுடன் வந்து காட்சியளித்து மக்களுக்கு அவற்றை அளித்ததால், நவராத்திரியில் இந்த ஸ்ரீசாகம்பரி வழிபாடு நடத்தப்படுகிறது.

No comments:
Post a Comment