வேர்க்கடலை சுண்டல்
வேர்க்கடலை சுண்டல்
தேவையானவை:
உரித்த வேர்க்கடலை - ஒரு கப்
மெல்லியதாக நறுக்கிய தக்காளி
மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய் - தலா 2 டேபிள்ஸ்பூன்
அரிசிப்பொரி - 6 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கடுகு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வேர்க்கடலையை உப்பு சேர்த்து வேகவிடவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகாய்த்தூள், தக்காளி, குடமிளகாயை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கி. இறுதியில் வேர்க்கடலையையும் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும். பொரியையும், கொத்தமல்லித்தழையையும் மேலே தூவிவிடவும்.

No comments:
Post a Comment