Wednesday, 28 September 2016

க்ரீம் ஆஃப் டொமேட்டோ சூப்

க்ரீம் ஆஃப் டொமேட்டோ சூப்

க்ரீம் ஆஃப் டொமேட்டோ சூப்

 

தேவையானவை:

 பெங்களூர் தக்காளி - 350 கிராம்

 கேரட் - 100 கிராம்

 வெள்ளை நூல்கோல் - 30 கிராம்

 பெரிய வெங்காயம் - 50 கிராம்

 வெஜிடபுள் ஸ்டாக் - ஒரு லிட்டர்

 பால் - 300 மில்லி

 மைதா - 30 கிராம்

 வெண்ணெய் - 30 கிராம்

 பிரட் - 2 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்)

 நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - பிரட் பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை:

தக்காளி, கேரட், வெள்ளை நூல்கோல், வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும்வெண்ணெய் சேர்க்கவும். வெண்ணெய் உருகி வரும்போது, அடுப்பின் தீயைக் குறைத்து மைதா மாவு சேர்த்து நிறம் மாறாமல் கிளறவும். இத்துடன் நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையுடன் வெஜிடபுள் ஸ்டாக் சேர்த்து நன்கு வேகவிடவும். காய்கறிகள் வெந்ததும், அடுப்பை அணைக்கவும். கலவையின் சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து மைய அரைக்கவும். இதை வடிகட்டி சாற்றைத் தனியாகப் பிரிக்கவும்.

அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து, பாலைச் சூடுபடுத்தி இறக்கவும். அடுப்பில் மீண்டும் மற்றொரு பாத்திரத்தை வைத்து, வடிகட்டி சேகரித்த வெஜிடபுள் சாறு சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்தக் கலவையுடன் சூடுபடுத்தி வைத்திருக்கும் பால், உப்பு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடத்துக்கு கொதிக்க விட்டு இறக்கவும். அடுப்பில் ஒரு சிறிய வாணலியை வைத்து எண்ணெய் விட்டு, பிரட்டை பொன்னிறமாகப் பொரித்தெடுத்து சூப்புடன் சேர்த்துக் கலக்கிவிடவும். இத்துடன், கொத்தமல்லித்தழைகளைத் தூவி, சூடாகப் பரிமாறவும்.

 

குறிப்பு:

சூப் பரிமாறும்போது, தேவைப்பட்டால், பிரட் மற்றும் கொத்தமல்லித்தழையுடன், சிறிதளவு ஃப்ரெஷ் க்ரீமை சேர்க்கலாம்.

 

No comments:

Post a Comment