Sunday, 25 September 2016

ஜவ்வரிசி பாயசம்

ஜவ்வரிசி பாயசம்

ஜவ்வரிசி பாயசம்

 

தேவையானவை:

 ஜவ்வரிசி - 150 கிராம்

 சேமியா - 100 கிராம்

 சர்க்கரை - கால் கிலோ

 ஏலக்காய் - 3

 முந்திரி - 10

 உலர் திராட்சை (கிஸ்மிஸ் )- 10

 காய்ச்சிய பால் - 500 மில்லி

 நெய் -தேவையான அளவு

 

செய்முறை:

நெய்யில் சேமியா, முந்திரி, திராட்சை, ஏலக்காயை தனித்தனியாக வறுத்து வைத்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை வேகவைத்துக் கொள்ளவும். இத்துடன் சேமியாவை சேர்த்து வேகவைக்கவும். சேமியா வெந்த பிறகு சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்த பிறகு முந்திரி, திராட்சை, ஏலக்காயை சேர்த்துக் கிளறி இறக்கவும். பரிமாறும் போது பால் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

No comments:

Post a Comment