Thursday, 29 September 2016

தால் மக்னி

தால் மக்னி

தால் மக்னி

 

தேவையானவை 

 கறுப்பு உளுந்து - 140 கிராம்

 ராஜ்மா பருப்பு - 40  கிராம்

 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

 உப்பு - தேவையான அளவு 

 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 தக்காளி - 2  (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)

 ஃப்ரெஷ் க்ரீம் - 100 மில்லி

 காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

 வெண்ணெய் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 சீரகம் - கால் டேபிள்ஸ்பூன்

 பிரிஞ்சி இலை - ஒன்று

 ஏலக்காய் - 2

 பட்டை - சிறிய துண்டு

 கஸூரி மேத்தி - முக்கால் டீஸ்பூன்

 

 செய்முறை:

உளுந்தையும் ராஜ்மா பருப்பையும் 9 மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஊறிய பருப்பை குக்கரில் வேக விடவும். அடுப்பில் வாணலியை வைத்து வெண்ணெய் சேர்த்து, உருகியதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி விழுது, சீரகத்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் வேக வைத்ததை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட்டு, ஃப்ரெஷ் கிரீம் மற்றும் வெண்ணெய் ஊற்றிக் கிளறி இறக்கி சூடு ஆறியதும் பரிமாறவும்.

No comments:

Post a Comment