Tuesday, 27 September 2016

மஷ்ரூம் சில்லி இட்லி

மஷ்ரூம் சில்லி இட்லி

மஷ்ரூம் சில்லி இட்லி

 

தேவையானவை:

 மொட்டுக் காளான் - 200 கிராம்

 இட்லி - 10

 பெரிய வெங்காயம் - 100 கிராம்

 இஞ்சி-பூண்டு விழுது - இரண்டு டீஸ்பூன்

 தக்காளி - 50 கிராம்

 மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்

 கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 எலுமிச்சை - அரை பழம் (சாறு எடுக்கவும்)

 பச்சைமிளகாய் - 3

 கறிவேப்பிலை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை:

இட்லிகளை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, காளான், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சேர்த்து, வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் காளான், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக வதக்கி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் கட் செய்து வைத்துள்ள இட்லியை சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி சூடாகப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment