ஸ்டீம்டு மஷ்ரூம் வடை
ஸ்டீம்டு மஷ்ரூம் வடை
தேவையானவை:
சிப்பிக் காளான் - 200 கிராம்
கடலைப்பருப்பு - 150 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
காய்ந்த மிளகாய்- 4
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
கடலைப்பருப்பை இரண்டு முறை கழுவி, 2 மணிநேரம் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். பிறகு கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். காளானை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். காளான், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, காளான், உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி இறக்கவும். இறக்கிய கலவையை அரைத்து வைத்துள்ள பருப்புக் கலவையுடன் வடை மாவு பதத்தில் கலந்து, வடைகள் போன்று தட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். பின்னர் வடையை, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment