Thursday 29 September 2016

தேங்காய்ச் சோறு

தேங்காய்ச் சோறு

தேங்காய்ச் சோறு

 

தேவையானவை:

 அரிசி - அரை கிலோ

 தேங்காய் - ஒன்று (மீடியம் சைஸ்)

 பெருஞ்சீரகம் - ஒரு டீஸ்பூன்

 வெந்தயம் - 5 கிராம்

 முழு பூண்டு - 1

 சின்ன வெங்காயம் - 2

 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 சாலியா - 10 கிராம் (சிவப்பு கலரில் சப்ஜா விதை போல இருக்கும்)

 சதக்குப்பை (பெரிய சீரகம் போல இருக்கும்) - 10 கிராம்

 பட்டைக் கருவா - 5 கிராம் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்)

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும் ஒரு பங்கு அரிசிக்கு இரண்டே கால் பங்கு பால் அளந்து வைத்துக் கொள்ளவும்). சாலியா, சதக்குப்பை, பட்டைக் கருவா, பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும் (முழுதாகவும் பூண்டுப்பல்லைச் சேர்க்கலாம்).

 

தேங்காய்ப்பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும். அரைத்து வைத்திருக்கும் சதக்குப்பை பேஸ்ட், வெங்காயம், பூண்டு, மஞ்சள்தூள், உப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கரைத்துக்கொள்ளவும். அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். தேங்காய்ப்பால் நன்றாகக் கொதித்ததும் அரிசியைச் சேர்க்கவும். சாதம் பாதி வெந்ததும் அடுப்பைக் குறைத்து 'தம்' போடவும். சாதம் வெந்ததும் இறக்கவும்.

 

குறிப்பு:

இந்த மருந்துச்சோறு பிரசவித்த உடம்புக்கு மிக நல்லது. ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் சுவையான, பாரம்பர்ய உணவு.

No comments:

Post a Comment