Thursday 29 September 2016

சுவரொட்டி கிரேவி

சுவரொட்டி கிரேவி

சுவரொட்டி கிரேவி

 

தேவையானவை:

 சுவரொட்டி (மண்ணீரல்) - அரை கிலோ

 நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

 சின்ன வெங்காயம் - 6

 தயிர் - 50 கிராம்

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

அரைக்க:

 முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 5

 கசகசா - அரை டீஸ்பூன்

 மிளகு - ஒரு டீஸ்பூன்

 தேங்காய் - அரை பத்தை

 

செய்முறை:

அரைக்க வேண்டியதை விழுதாக அரைக்கவும். சுவரொட்டியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். நறுக்கும்போது உடையும். நிதானமாக நறுக்கவும். இதை குக்கரில் சேர்த்து இரண்டாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தயிர், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து அரைத்து வைத்திருக்கும் முந்திரி விழுதைச் சேர்க்கவும். இதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அனைத்தையும் கலந்து கொள்ளவும். குக்கரை மூடி 2 விசில் விடவும். விசில் இறங்கியதும் குக்கரை திறந்து பார்க்கவும். கிரேவியில், தண்ணீர் இருந்தால் வற்றவிடவும். வற்றியதும் அதிலேயே நல்லெண்ணெய் ஊற்றி, அடுப்பை சிம்மில் வைத்துப் பொரிய விடவும். 10 நிமிடத்தில் நன்றாகப் பொரிந்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி விடலாம்.

 

குறிப்பு:

சுவரொட்டி, பிரசவித்த பெண்கள், பருவமடைந்த பெண்களுக்கு ரத்த இழப்பை ஈடு செய்யும். சத்துக் குறைந்த குழந்தைகளுக்கும் இதைக் கொடுக்கலாம். இது இதயத்துக்கு வலு கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment