Saturday, 24 September 2016

கிச்சடி

கிச்சடி

கிச்சடி

 

தேவையானவை:

 

மூங்கில் அரிசி  ஒரு கப்

 

பாசிப்பருப்பு  4 டேபிள்ஸ்பூன்

 

கடலைப்பருப்பு  4 டேபிள்ஸ்பூன்

 

பட்டை  சிறிய துண்டு

 

கிராம்பு  ஒன்று

 

ஏலக்காய்  ஒன்று

 

இஞ்சித்துருவல்  ஒரு டீஸ்பூன்

 

பிரிஞ்சி இலை  ஒன்று

 

நெய்  2 டேபிள்ஸ்பூன்

 

பச்சை மிளகாய்  2

 

உப்பு  தேவையான அளவு

 

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

 

சீரகம்  அரை டீஸ்பூன்

 

செய்முறை:

 

மூங்கில் அரிசியை சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊற விடவும். பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் நெய் ஒரு டேபிள்ஸ்பூன் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், பச்சைமிளகாய், பிரிஞ்சி இலை, கடலைப்பருப்பை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் இஞ்சித்துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு 4 கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மூங்கில் அரிசி, பாசிப்பருப்பை சேர்த்துக் குழைய வேக விடவும். பிரஷர் வந்ததும் தீயை சிம்மில் 20 நிமிடம் வேகவிட்டு எடுத்து, மீதமுள்ள நெய் ஊற்றிக் கிளறிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment