Saturday, 24 September 2016

மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம்

மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம்

மெக்சிகன் சிக்கன் ஊத்தப்பம்

 

தேவையானவை:

 

தோசை மாவு  அரை கிலோ

 

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்  ஒன்று

 

பொடியாக நறுக்கிய தக்காளி  ஒன்று

 

பொடியாய நறுக்கிய கேரட்  2

 

சிக்கன்  200 கிராம்

 

இட்லி பொடி  2 டேபிள்ஸ்பூன்

 

சீஸ்  25 கிராம்

 

வெண்ணெய்  25 கிராம்

 

உப்பு  தேவையான அளவு

 

செய்முறை:

 

சிக்கனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும். அடுப்பில், தோசைக்கல்லை வைத்து காய்ந்ததும், சிறிது வெண்ணெய் தடவி, தோசைமாவை ஊத்தப்பம் போன்று ஊற்றவும். இதன் மீது வெங்காயம், கேரட், தக்காளி, சிக்கன் துண்டுகளையும் வைக்கவும். பின் ஊத்தப்பத்தின் எல்லா இடங்களிலும் படுமாறு இட்லிப் பொடியைத் தூவவும். சுற்றிலும், வெண்ணெய் விட்டு வேகவிடவும். வெந்ததும் சீஸ் தூவி இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment