கோஸ் பொரியல்
கோஸ் பொரியல்
தேவையானவை:
முட்டைகோஸ் - 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - ஒன்று
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முட்டைகோஸ், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், இதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து நன்கு கிளறி வாணலியை ஒரு மூடியால் மூடவும். அடுப்பைக் குறைத்து வைத்து, மூடியைத் திறந்து வேகும் வரை இடை இடையே கிளறி விடவும். நன்கு வெந்தவுடன் துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு:
தேவையென்றால், பாதியாக வேக வைத்த துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பை தேங்காய் சேர்க்கும்போது சேர்த்துக் கொள்ளலாம். முட்டைகோஸை சிறிது தண்ணீரில் உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்தும் பொரியல் செய்யலாம்.

No comments:
Post a Comment