ஸ்வீட் கார்ன் சுண்டல்
ஸ்வீட் கார்ன் சுண்டல்
தேவையானவை:
ஸ்வீட்கார்ன் முத்துக்கள் - ஒரு கப்
தேங்காய்த் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
வறுத்துப் பொடிக்க:
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மல்லி (தனியா) - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எள் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
ஸ்வீட்கார்னை உப்பு சேர்த்து வேகவிடவும் (விரைவில் வெந்துவிடும்... கவனம்). வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் தாளித்து, வெந்த ஸ்வீட் கார்னை சேர்த்து வதக்கி, பொடித்து வைத்த பொடியைத் தூவி, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி, கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

No comments:
Post a Comment