Thursday, 29 September 2016

பச்சைப் பட்டாணி சுண்டல்

பச்சைப் பட்டாணி சுண்டல்

பச்சைப் பட்டாணி சுண்டல்

 

தேவையானவை:

 உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்

 கேரட் துருவல், தேங்காய்த் துருவல் - தலா 4 டேபிள்ஸ்பூன்

 நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

தாளிக்க:

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

 பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

 காய்ந்த மிளகாய் - 2

 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை:

பச்சைப் பட்டாணியை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவிடவும் (விரைவில் வெந்துவிடும்... கவனம்). வாணலியில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெந்த பட்டாணியை சேர்த்துப் புரட்டி... கேரட் துருவல், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.

No comments:

Post a Comment