வல்லாரைக் கீரை பருப்புமசியல்
வல்லாரைக் கீரை பருப்புமசியல்
தேவையானவை:
வல்லாரைக் கீரை - ஒரு கட்டு
துவரம்பருப்பு - ஒரு கப்
தக்காளி - 1
சின்ன வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
சீரகம், வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
துவரம்பருப்பை ஒரு சிட்டிகை பெருங்காயம், சீரகம், வெந்தயம், மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டுப்பல் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வல்லாரைக் கீரையை சுத்தம் செய்யவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் சுத்தம் செய்த வல்லாரைக் கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை சிறிது வெந்ததும், வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து கொதித்து வந்ததும், இறக்கவும்.
சூடான சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லா வகையான உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். வல்லாரை, ஞாபக சக்தியைத் தூண்டும். வல்லாரைக் கீரையைச் சமைக்கும் போது, புளி சேர்த்தால், வல்லாரையின் சத்துக்கள் அழிந்து விடும். வல்லாரைக் கீரையை வாரம் இருமுறை மட்டுமே உணவில் சேர்க்க வேண்டும். தினசரி சாப்பிடக் கூடாது. தேர்வு நேரம் மட்டுமின்றி வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

No comments:
Post a Comment