Saturday, 24 September 2016

முருங்கை மசாலா

முருங்கை மசாலா

முருங்கை மசாலா

 

தேவையானவை:

 

முருங்கைக்காய் – 2

 

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் ஒன்று

 

பாசிப்பருப்பு  ஒரு கைப்பிடி

 

தக்காளி ஒன்று

 

பூண்டு – 4

 

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

 

உப்பு தேவையான அளவு

 

எண்ணெய் தேவையான அளவு

 

தாளிக்க:

 

கடுகு ஒரு டீஸ்பூன்

 

உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்

 

கறிவேப்பிலை  சிறிதளவு

 

செய்முறை:

 

பாசிப்பருப்பை வேகவைத்துக்கொள்ளவும். முருங்கைக்காயை நீளவாக்கில் நறுக்கி வேகவைத்துக்கொள்ளவும். வெங்காயம், பூண்டு, தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து நிறம் மாற வதக்கவும். இத்துடன் தக்காளி, உப்பு சேர்த்து தக்காளி கரையும்வரை நன்கு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி, சாம்பார் பொடி, வேகவைத்த பருப்பு, முருங்கைக்காயைச் சேர்த்துக் கிளறி மிதமான தீயில் 5 நிமிடம் வேகவைத்திருந்து இறக்கவும்.

No comments:

Post a Comment