Wednesday, 28 September 2016

வெஜிடபுள் ஸ்டாக்

வெஜிடபுள் ஸ்டாக்

 

தேவையானவை:

 கேரட் - 50 கிராம்

 பெரிய வெங்காயம் - 50 கிராம்

 செலரி - 10 கிராம்

 மிளகு - 5 கிராம்

 பூண்டு - 3 பல்

 பிரியாணி இலை - ஒன்று

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

கேரட்டை மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாகவும், பூண்டுப் பல்களை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி வெங்காயம், செலரி, பூண்டு, மிளகு, பிரியாணி இலை, கேரட் சேர்த்து தீயை அதிகமாக்கி வதக்கவும்.

ஐந்து நிமிடத்துக்கு பிறகு கலவையில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பதினைந்து நிமிடம் அதிக தீயில் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு, தண்ணீரை மட்டும் வடிகட்டினால், வெஜிடபுள் ஸ்டாக் தயார். சூப் செய்வதற்கு அடிப்படையானது இந்த 'ஸ்டாக் வெஜிடபுள்'.

No comments:

Post a Comment