அவியல்
அவியல்
தேவையானவை:
முருங்கைக்காய் - ஒன்று
கத்திரிக்காய் - 2
வாழைக்காய் - சிறிதளவு
அவரைக்காய் - 4
புடலங்காய் - சிறிதளவு
கேரட் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
பூசணிக்காய் - சிறிதளவு
சேனைக்கிழங்கு - சிறிதளவு
தயிர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
அரைக்க:
தேங்காய் - அரை கப்
பச்சைமிளகாய் - 4
சீரகம் - 2 டீஸ்பூன்
செய்முறை:
கொடுத்துள்ள காய்களில் தோல் நீக்க வேண்டியவற்றை தோல் நீக்கி, எல்லாவற்றையும் ஒரே அளவுள்ள நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய காய்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும். காய்கள் நன்றாக வெந்தவுடன், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து காயுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கடைந்து கொதிக்கும் அவியலில் ஊற்றவும். ஒரு வாணலியில், தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி இதில் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து அவியலில் ஊற்றி இறக்கவும்.
குறிப்பு:
தேவையென்றால், கடுகும் சேர்த்துத் தாளிக்கலாம்

No comments:
Post a Comment