Monday, 26 September 2016

செளசெள கூட்டு

செளசெள கூட்டு

செளசெள கூட்டு

 

தேவையானவை:

 பொடியாக நறுக்கிய செளசெள - 2 கப்

 சின்ன வெங்காயம் - 4

 பாசிப்பருப்பு - கால் கப்

 மஞ்சள்தூள் - சிறிதளவு

 

அரைக்க:

 துருவிய தேங்காய் - 3 டேபிள்ஸ்பூன்

 பச்சைமிளகாய் - 2

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 

தாளிக்க:

 எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

 கடுகு, உளுத்தம்பருப்பு -

  தலா ஒரு டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

நறுக்கிய செளசெள, பாசிப்பருப்பு, (பாசிப்பருப்பை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்), பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து வேக வைத்துள்ள செளசெளவில் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும். வாணலியை அடுப்பில் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் கூட்டில் ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.

 

குறிப்பு:

பாசிப்பருப்புக்கு பதில் கடலைப்பருப்பும் சேர்க்கலாம், அல்லது இரண்டையும் பாதி பாதி அளவு சேர்க்கலாம்.

No comments:

Post a Comment