Monday, 26 September 2016

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய்

 

தேவையானவை:

 புளிப்பு மாங்காய் - 400 கிராம்

 கடுகு - 40 கிராம்

 காய்ந்த மிளகாய் - 40 கிராம்

 நல்லெண்ணெய் - 100 மில்லி

 உப்பு - 40 கிராம்

 வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

மாங்காயை நன்கு கழுவி, ஈரம் போக துடைத்து விரும்பிய அளவு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெறும் வாணலியில் காய்ந்த மிளகாய், கடுகு, வெந்தயம் முதலியவற்றை வறுத்து ஆறியவுடன் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய மாங்காயை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, இதில் அரைத்த பொடி, நல்லெண்ணெய், உப்பு கலந்து நன்கு பிசிறவும். பிசிறிய ஊறுகாயை ஒரு ஜாடியில் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் வெயிலில் வைக்கவும். நன்கு ஊறியவுடன் தயிர் சாதத்துடன் பரிமாறவும்.

 

குறிப்பு:

நல்லெண்ணெய் இன்னும் கூட அதிகமாக ஊற்றிக் கொள்ளலாம். ஊறுகாயை எடுத்துப் பரிமாறும்போது ஈரமில்லாத ஸ்பூனை உபயோகப்படுத்தவும்.

No comments:

Post a Comment