சட்டு புட்டு மீன் குழம்பு
சட்டு புட்டு மீன் குழம்பு
தேவையானவை:
புளிக்கரைசல் - 15 கிராம்
சங்கரா மீன் - அரை கிலோ
அரைக்க:
தேங்காய் - அரை முடி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய
சின்ன வெங்காயம் - 6
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
மீனைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து கரைத்து வைத்துள்ள கலவையில் ஊற்றவும். அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிட்டு சுத்தம் செய்த மீனை அதில் சேர்த்து வேகவைத்துப் பரிமாறவும்.

No comments:
Post a Comment