ஆலு பாலக்
ஆலு பாலக்
தேவையானவை:
உருளைக்கிழங்கு - 250 கிராம்
பாலக்கீரை - 350 கிராம்
நறுக்கிய இஞ்சி-பூண்டு - சிறிதளவு
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2
தக்காளி - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - 25 கிராம்
சீரகம் - அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - கால் டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - அரை டீஸ்பூன்
ஃப்ரெஷ் க்ரீம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கி தனியே வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை நீளமாகவோ அல்லது குறுக்குவாக்கிலோ நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை லேசாகக் கொதிக்க வைத்து அதில் சர்க்கரை சேர்த்து கரைந்ததும், சுத்தம் செய்து மீடியம் சைஸில் நறுக்கி வைத்துள்ள பாலக்கீரையைச் சேர்த்து சிறிது நேரம் மூடிவைக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டு உருகியதும் சீரகம் சேர்த்துப் பொரியவிடவும். இதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். இதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து கரையும் வரை நன்கு வதக்கவும். இத்துடன் மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, வேகவைத்த உருளைக்கிழங்கு, கொதிக்கும் சர்க்கரை தண்ணீரில் வைத்துள்ள கீரையையும் (தண்ணீர் வடித்து) சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும். விரும்புபவர்கள் பரிமாறும்போது ஃப்ரெஷ் க்ரீமை சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment