Tuesday, 27 September 2016

கஜோர் கட்டா

கஜோர் கட்டா

கஜோர் கட்டா

 

தேவையானவை:

 பேரீச்சம்பழம் - 15

 பெங்களூர் தக்காளி - 2

 பச்சைமிளகாய் - 2

 வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

பேரீச்சம்பழத்தை விதை நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லித்தழை இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வெல்லத்தைப் பொடித்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிதளவு மஞ்சள்தூள், பேரீச்சம்பழம், பொடித்த வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும். இதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இந்தக் கலவையானது வெந்து, சட்னி பதத்துக்கு வந்த பிறகு, இறுதியில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சப்பாத்திக்கு சேர்த்து சாப்பிட அசத்தல் ருசி தரும்.

No comments:

Post a Comment