காக்ரா சாலட்
காக்ரா சாலட்
தேவையானவை:
காக்ரா - ஒரு பாக்கெட் (பார்க்க, சுட்ட அப்பளம் போல் இருக்கும்)
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
குடமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
மயோனைஸ் - 2 டேபிள்ஸ்பூன்
சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி, குடமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இத்துடன், சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும். சீஸை துருவித் தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் காக்ராவை எடுத்து, அதன் மேல் மயோனைஸை பரவலாகத் தடவவும். அதன்மேல், பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிக் கலவையைத் தூவி, பிறகு இதன் மீது துருவிய சீஸை தூவி, மற்றொரு காக்ராவை மேலே வைத்தால் சாலட் தயார்.

No comments:
Post a Comment