Tuesday, 27 September 2016

கேப்ஸி வெஜ் ஆம்லெட்

கேப்ஸி வெஜ் ஆம்லெட்

கேப்ஸி வெஜ் ஆம்லெட்

 

தேவையானவை:

 சிவப்பு மற்றும் பச்சை நிற குடமிளகாய் - தலா ஒன்று

 கடலை மாவு - ஒரு கப்

 பெரிய வெங்காயம் - ஒன்று

 கேரட் - ஒன்று

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

 எண்ணெய் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

முதலில் வெங்காயம், கொத்தமல்லித்தழை போன்றவற்றைப் பொடியாக நறுக்கித் தனியே வைத்துக்கொள்ளவும். கேரட்டைத் துருவி வைத்துக்கொள்ளவும். குடமிளகாய்களை வட்டமாக நறுக்கி தனியே வைத்துக்கொள்ளவும். ஒரு பவுலில் கடலை மாவைச் சேர்த்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லித்தழை, துருவிய கேரட், மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் தண்ணீர் விட்டு கலந்துகொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சூடானதும், அதில் குடமிளகாய் துண்டுகளை வைத்து, கரைத்துத் தயாராக வைத்திருக்கும் மாவை குடமிளகாய் வட்டத்துக்குள் ஊற்றவும். இதன் மீது சிறிது எண்ணெய் விட்டு, திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுத்துப் பரிமாறவும். சுவையான கேப்ஸி வெஜ் ஆம்லெட் தயார்.

No comments:

Post a Comment