Tuesday, 27 September 2016

முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ்

முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ்

முருங்கைக்கீரை முட்டை பொடிமாஸ்

 

தேவையானவை:

 முருங்கக்கீரை - ஒரு கப்

 முட்டை - 3

 சின்ன வெங்காயம் - 15

 பூண்டு  - 5

 பச்சை மிளகாய் - 2

 மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

 மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

 சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

 கடுகு - அரை டீஸ்பூன்

 உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 

செய்முறை :

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து,கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்.பூண்டு,பச்சை மிளகாய்,சேர்த்து பொன்னிறமாக வதக்கி முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும். அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி, இதனுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி, பிறகு பரிமாறவும்

No comments:

Post a Comment