டாஸ்டு சேலட்
டாஸ்டு சேலட்
தேவையானவை:
பெங்களூரு தக்காளி, குடமிளகாய் - தலா 25 கிராம்
கேரட், வெள்ளரி - 25 கிராம்
முட்டைக்கோஸ், முள்ளங்கி
- தலா 25 கிராம்
பெரிய வெங்காயம் - 1
சேலட் ஆயில்/ஆலிவ் ஆயில்
- ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குடமிளகாய், கேரட், வெள்ளரி, முள்ளங்கி, வெங்காயம் மற்றும் விதைகள் நீக்கி சதுரமாக நறுக்கிய தக்காளி. பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் ஆகியவற்றை ஒரு பவுலில் சேர்க்கவும். மீதம் உள்ள அனைத்தையும் இதனுடன் சேர்த்து கலக்கிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment