வெஜ் கொத்து பரோட்டா
வெஜ் கொத்து பரோட்டா
தேவையானவை:
பரோட்டா (மீடியம் சைஸ்) - 2
கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர் - தலா 25 கிராம்
தக்காளி - அரை பழம்
பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் - தலா 1
மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
பரோட்டாவை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். கொதிக்கும் தண்ணீரில் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவரை சேர்த்து ஒரு நிமிடம் கழித்து தனியே எடுத்து வைக்கவும். தோசைக்கல்லில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் சுடுநீரில் போட்டு எடுத்த காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள் தூள், கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து வதக்கவும். இதில் பரோட்டா துண்டுகளைச் சேர்த்து வதக்கி, மீதம் இருக்கும் எண்ணெயை இத்துடன் சேர்க்கவும். இரண்டு தோசைக் கரண்டிகளைக் கொண்டு பரோட்டாக்களை நன்கு கொத்திவிட்டு வதக்கவும். இறுதியாக மிளகுத்தூள் தூவி சூடாகப் பரிமாறவும்.

No comments:
Post a Comment