Tuesday, 27 September 2016

மேத்தி மிஸ்ஸி ரொட்டி

மேத்தி மிஸ்ஸி ரொட்டி

மேத்தி மிஸ்ஸி ரொட்டி

 

தேவையானவை:

 

 வெந்தயக்கீரை (மேத்தி) - 50 கிராம்

 கோதுமை மாவு, கடலை மாவு - தலா 100 கிராம்

 பச்சைமிளகாய், பெரிய வெங்காயம் - தலா 1

 ஓமம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் - தலா கால் டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 நெய் - 25 மில்லி

 

செய்முறை:

 

வெந்தயக்கீரையை நீரில் நன்றாக சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் சேர்க்கவும். இத்துடன் வெந்தயக்கீரை, ஓமம், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். இதை 20 நிமிடங்களுக்கு ஊறவைத்து, சிறு சிறு உருண்டைகளாக்கவும். இனி உருண்டைகளை மாவில் புரட்டி வட்டமாகத் தேய்க்கவும். தோசைக்கல்லில் நெய் ஊற்றி இருபுறமும் நன்கு சுட்டெடுக்கவும். மேத்தி மிஸ்ஸி ரொட்டியை சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment