Wednesday, 28 September 2016

டால் தீரங்கி

டால் தீரங்கி

டால் தீரங்கி

 

தேவையானவை:

 

 கடலைப்பருப்பு, கறுப்பு உளுந்து, ராஜ்மா - தலா 50 கிராம்

 பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1

 பச்சைமிளகாய் - 3

 பூண்டு - 5 (பொடியாக நறுக்கவும்)

 இஞ்சி - சிறிய நெல்லிக்காய் அளவு

 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 வெண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்

 கடுகு - கால் டீஸ்பூன்

 சீரகம் - அரை டீஸ்பூன்

 ஃப்ரெஷ் க்ரீம் - 50 மில்லி

 உப்பு - தேவையான அளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

செய்முறை:

 

கடலைப்பருப்பு, கறுப்பு உளுந்து, ராஜ்மா மூன்றையும் சேர்த்து நன்கு கழுவி, இவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேர ஊற வைக்கவும். பிறகு, தண்ணீரை வடித்து, குக்கரில் சேர்த்து, உப்பு, தண்ணீர் ஊற்றி குழைய வேக விடவும். பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கவும். தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.

 

வாணலியில் வெண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு, சீரகம் தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் அரைத்த தக்காளி, நறுக்கிய இஞ்சி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து வதக்கி, வெந்த பருப்புகளை இத்துடன் சேர்த்து ஐந்து நிமிடம் வேகவிடவும். பிறகு தீயைக் குறைத்து ஃப்ரெஷ் க்ரீம் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிடவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறலாம்.

No comments:

Post a Comment