Thursday 29 September 2016

ஹோல் சிக்கன் தம் பிரியாணி

ஹோல் சிக்கன் தம் பிரியாணி

ஹோல் சிக்கன் தம் பிரியாணி

 

தேவையானவை:

 பாஸ்மதி அரிசி - 1 கிலோ 

 முழு சிக்கன் (முழுக் கோழி) -

 தயிர் - 1 கப்

 இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்

 முந்திரி விழுது -  2 டேபிள்ஸ்பூன்

 எலுமிச்சைப்பழம் - ஒன்று (சாறு எடுக்கவும்)

 மிளகாய்த்தூள்  - அரை டேபிள்ஸ்பூன்

 மஞ்சள் தூள்  - அரை டீஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - 50 கிராம்

 புதினா இலை - 50 கிராம்

 பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 200 கிராம்

 பொடியாக நறுக்கிய தக்காளி - 100 கிராம் 

 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 5

 சோம்பு - 2 டேபிள்ஸ்பூன்

 கரம்மசாலா - 1 டேபிள்ஸ்பூன்

 மல்லித்தூள் (தனியாத்தூள்)  -  அரை டீஸ்பூன்

 சோள மாவு (கார்ன் ப்ளார் மாவு )- 2 டேபிள்ஸ்பூன்

 பட்டை -

 கிராம்பு - 4

 ஏலக்காய் - 4

 அன்னாசி்ப்பூ -

 பிரிஞ்சி இலை - 1

 எண்ணெய் - 200 மி.லி.

 நெய் - 50 மில்லி

 உப்பு -தேவையான அளவு

 

செய்முறை:

பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் வாயகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலையைச் சேர்த்து சிவக்க வறுக்கவும். இதில் ஊற வைத்த பாஸ்மதி அரிசி மற்றும் தேவையான தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு 10 நிமிடம் வேக வைத்து தனியாக வைக்கவும். முழுக்கோழியை சுத்தம் செய்து வாங்கி வந்து, வீட்டிலும் இரண்டு முறை சுத்தம் செய்யவும். கோழியின் வயிற்றுப் பகுதி காலியாக இருக்க வேண்டும். ஒரு பவுலில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சோள மாவு, உப்பு, தயிர், எலுமிச்சைச் சாறு, மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றாக கலக்கவும். இதனை சிக்கனின் மேல் பகுதி மற்றும் உள் பகுதியிலும் தடவி 15 நிமிடம் ஊறவைக்கவும். சிக்கனை பொரிக்கும் அளவுக்கு பெரிய வாணலியில் சிக்கனைப் பொரித்தெடுக்கவும். அவன் இருப்பவர்கள் கிரில் முறையில் கோழியை வேக வைத்து எடுக்கலாம். வீட்டில் பெரிய வாணலி இல்லாதவர்கள் ஊறிய முழு சிக்கனை, பொரிக்க முடிகிற அளவுக்கு பெரிய துண்டுகளாக நறுக்கி பொரித்தெடுக்கலாம். அடுப்பில் வாயகன்ற பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து கரையும் வரை வதக்கி, கரம்மசாலாத் தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மற்றும் பொரித்ததெடுத்த சிக்கன் துண்டுகள் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும். இதில் வெந்த சாதம், முந்திரி விழுது, கொத்தமல்லித்தழை, புதினா இலை சேர்த்து கிளறி நெய் ஊற்றி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் 'தம்' போட்டு இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment