மட்டன் சுக்கா
மட்டன் சுக்கா
தேவையானவை:
மட்டன் சுக்கா கறி - ஒரு கிலோ
நல்லெண்ணெய் - 100 மில்லி
சீரகம் - 2 கிராம்
பட்டை - 1 கிராம்
கிராம்பு - 3
அன்னாசிப்பூ - 1 கிராம்
காய்ந்த மிளகாய் - 3 கிராம்
பிரிஞ்சி இலை - 1 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்)
கறிவேப்பிலை - 2 கிராம்
மஞ்சள்தூள் - 2 கிராம்
பூண்டு விழுது - 30 கிராம்
இஞ்சி விழுது - 20 கிராம்
தக்காளி - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - 15 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு, சீரகத்தூள் - 10 கிராம் (மிளகு 7.5 கிராம் + சீரகம் - 2.5 கிராம்)
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, காய்ந்த மிளகாய், பிரிஞ்சி இலை என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். நன்கு சிவந்தவுடன், இதில் கறிவேப்பிலை, நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும். பூண்டு விழுது, இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கியதும், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் தக்காளியைச் சேர்த்துக் கரைய வதக்கி, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு உப்பு, மட்டனைச் சேர்த்து கலவை மட்டனோடு சேரும் வரை மிதமான தீயில் நன்கு வதக்கவும். மட்டன் வேக வைக்கத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மட்டன் வெந்ததும் மிளகு மற்றும் சீரகத்தூள் தூவிக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.

No comments:
Post a Comment