Tuesday, 27 September 2016

மட்டன் கோலா

மட்டன் கோலா

மட்டன் கோலா

 

தேவையானவை:

 மட்டன் கைமா செய்வதற்கு ஏற்றதுபோல கொத்தி வாங்கிக்கொள்ளவும்

- ஒரு கிலோ

 சின்ன வெங்காயம் - 500 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 பச்சைமிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 பூண்டு - 20 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 இஞ்சி - 10 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 தேங்காய் - ஒன்று (துருவிக் கொள்ளவும்)

 உப்பு - தேவையான அளவு

 பொட்டுக்கடலை (மிக்ஸியில் அரைக்கவும்) - 30 கிராம்

 கடலை எண்ணெய் - ஒரு லிட்டர்

 

கோலா மசாலாவுக்கு:

 சோம்பு - 2 சிட்டிகை

 சீரகம் - 2 சிட்டிகை

 மிளகு - 10 கிராம்

 பட்டை - ஒரு சிறிய துண்டு

 கிராம்பு - 2

 ஏலக்காய் - 2

 அன்னாசிப்பூ - ஒன்று

 கசகசா - 10 கிராம்

(இவற்றை வெறும்சட்டியில் வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.)

 

செய்முறை:

வாணலியில் 150 மில்லி கடலை எண்ணெய் சேர்த்து, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, சேர்த்து வதக்கவும். பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி, இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் துருவிய தேங்காயைச் சேர்த்து அவற்றில் உள்ள நீர்ச்சத்து வற்றும் வரை நன்கு வறுக்கவும். அத்துடன் பொடித்த பொட்டுக்கடலை மற்றும் கோலா மசாலா சேர்த்து வதக்கவும். இந்தக் கலவையையும் இன்னொரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் கைமா கறியை நீர்ச்சத்து வற்றும் வரை நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு ஏற்கெனவே தனியாக வதக்கி வைத்துள்ள 2 கலவைகளை கைமாவுடன் சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து, வதக்கிய கலவையை மேற்படி பொருட்களை உருண்டை பிடிக்கும் பதத்துக்கு கிரைண்டரில் அரைக்கவும். அரைத்ததை சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடிக்கவும். வாணலியில் கடலை எண்ணெய் சூடானதும் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment