ரைஸ் பேன் கேக்
ரைஸ் பேன் கேக்
தேவையானவை :
வெந்த சாதம் - 2 கப்
துருவிய கேரட் - அரை கப்
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயத்தாள் - தலா அரை கப்
கோதுமை மாவு - கால் கப்
கடலை மாவு - அரை கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
ஃபாயில் பேப்பர் - தேவையான அளவு
செய்முறை :
முட்டைகோஸை பொடியாக நறுக்கி விருப்பப்பட்டால், அரை வேக்காடு அளவுக்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சாதத்தை ஒரு பவுலில் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்துக்கொள்ளவும். இதில் தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள ஃபாயில் பேப்பர் தவிர்த்து மற்ற அனைத்தையும் சேர்த்து கலந்து உருண்டை பிடிக்கவும். ஃபாயில் பேப்பர் அல்லது வாழை இலையில் லேசாக எண்ணெய் தடவி, பிடித்த உருண்டையை அதில் வைத்து லேசாக தட்டிக்கொள்ளவும்.
இனி ஃபாயில் பேப்பரோடு தோசைக்கல்லில் வைத்து மெதுவாக பேப்பரை எடுத்துவிட்டு இருபுறமும் சுட்டு எடுத்து, டிபன் பாக்ஸில் வைத்து பரிமாறவும். இதற்கும் சாஸ் நன்றாக இருக்கும். வாழை இலை என்றால் அப்படியே சுட்டு எடுக்கலாம்.

No comments:
Post a Comment