இட்லி சாட்டே
இட்லி சாட்டே
தேவையானவை :
இட்லி - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
மூன்று நிற குடமிளகாய் - தலா ஒன்று
தக்காளி - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
தக்காளி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்
சோளா மாவு- ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை :
இட்லிகளை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி ஒரு பவுலில் சேர்க்கவும். இதில் சோள மாவு, உப்பு சேர்த்துக் கிளறிக்கொள்ளவும். அடுப்பில் நான் ஸ்டிக் தவாவை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாக இட்லிகளை வறுத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளி, குடமிளகாய் ஆகியவற்றை இட்லி சைஸுக்கே நறுக்கிக்கொள்ளவும். இன்னொரு பேனில் எண்ணெய் விட்டு, இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும் வெங்காயம், குடமிளகாய், தக்காளி, சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு வறுத்த இட்லியையும் சேர்த்து போட்டு கிளறி எடுக்கவும். டிபன் பாக்ஸில் வைக்கும் போது வெங்காயத்தாள்களை மேலே தூவி விட்டு, லஞ்ச் பாக்ஸில் வைக்கவும்.

No comments:
Post a Comment