பிரெட் பீட்சா
பிரெட் பீட்சா
தேவையானவை :
பிரெட் - 5
பீட்சா சாஸ் (அ) தக்காளி சாஸ் - 5 டேபிள்ஸ்பூன்
துருவிய ப்ராசஸ்டு சீஸ் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பொடியாக நறுக்கிய மூன்று கலர் குடமிளகாய் - தலா ஒன்று
வேகவைத்து பொடியாக நறுக்கிய பேபிஃகார்ன் - ஒன்று
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிடவும். தோசைக்கல்லை சூடாக்கி, பிரெட் ஸ்லைஸ்களை இதில் வைக்கவும். இதன் மேல் பீட்சா சாஸ் (அ) தக்காளி சாஸை தடவி குடமிளகாய், பேபிஃகார்ன், வெங்காயம் ஆகியவற்றை வைக்கவும். பிறகு மேலே மிளகுத்தூள், உப்பைத் தூவி, சீஸை வைக்கவும். பிறகு, மூடி போட்டு பிரெட்டை 2 நிமிடம் வேகவிடவும். பிறகு, எடுத்து விரும்பிய வடிவில் கட் செய்து, லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்தனுப்புங்கள். கிரஞ்சியாகவும் சாப்பிட டேஸ்டாகவும் இருக்கும்.

No comments:
Post a Comment