பனீர் முட்டைகோஸ் சாண்ட்விச்
பனீர் முட்டைகோஸ் சாண்ட்விச்
தேவையானவை :
பிரெட் - 10
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - ஒரு கப்
தூளாக்கிய பனீர் - 3 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை :
முட்டைகோஸ், பனீர், கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒரு பவுலில் ஒன்றாகச் சேர்த்துக் கிளறிக் கொள்ளவும். தோசைக்கல்லில் வெண்ணெய் விட்டு பிரெட்டை சேர்த்து இருபுறமும் லேசாக சுட்டெடுக்கவும். இனி, பிரெட்டின் மேல் பனீர், முட்டைகோஸ், கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், உப்புக் கலவையை வைத்து, அதன் மேல் இன்னொரு பிரெட்டால் மூடவும். இனி, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப பிரெட்டை துண்டுகளாக்கி தக்காளி சாஸுடன் டிபன் பாக்ஸில் வைத்துக் கொடுக்கவும்.

No comments:
Post a Comment