மேத்தி ஆலு கட்லெட்
மேத்தி ஆலு கட்லெட்
தேவையானவை :
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை - அரை கப்
சீரகம் - ஒண்ணே கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கின பூண்டு, இஞ்சி - தலா அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
கஸூரி மேத்தி - ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
அம்சூர் பவுடர் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
சோள மாவு - கால் கப்
பிரெட் கிரம்ப்ஸ் - கால் கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு பவுலில் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாகத் தட்டி, அவற்றை கையால் கட்லெட் வடிவத்துக்கு தட்டி வைக்கவும். இல்லாவிட்டால், உங்களுக்கு விருப்பமான வடிவில் தட்டிக் கொள்ளவும். தட்டியவற்றை எல்லாம் பிரட் கிரெம்ஸில் புரட்டி வைக்கவும். இனி, தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு கட்லெட்டை சேர்த்து இருபுறமும் சுட்டெடுத்து தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

No comments:
Post a Comment