சாக்வாலா சிக்கன் (கீரை சிக்கன் கிரேவி)
சாக்வாலா சிக்கன் (கீரை சிக்கன் கிரேவி)
தேவையானவை
சிக்கன் (கோழிக்கறி) - அரை கிலோ
ஃப்ரெஷ் க்ரீம் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று (விழுதாக அரைத்துக்கொள்ளவும்)
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - கால் டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
கஸூரி மேத்தி - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - ஒன்று
அரைக்க:
பசலைக்கீரை - ஒரு கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நசுக்கிய பூண்டு - 4 பல்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
செய்முறை:
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி சூடானதும், அரைக்கக் கொடுத்தவற்றை சேர்்த்து வேகவைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து சீரகம், பிரிஞ்சி இலைகளைச் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தக்காளி விழுது சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசம் போகும் வரை 10 நிமிடம் கொதிக்க விட்டு, அரைத்த விழுதை இதனுடன் கலக்கவும். பின்னர் நறுக்கிய சிக்கன், சேர்த்து நன்கு வேக விடவும். சிக்கன் வெந்ததும் கஸூரி மேத்தி இலை ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment