Tuesday, 27 September 2016

தட்டை வடை செட்

தட்டை வடை செட்

தட்டை வடை செட்

 

தேவையானவை:

 சிறிய தட்டை - 20

 பீட்ரூட் மற்றும் கேரட் - தலா ஒன்று

 பெரிய வெங்காயம் - ஒன்று

 தோல் நீக்கி துருவிய பச்சை மாங்காய் - ஒன்று

 துருவிய தேங்காய் - ஒரு கப்

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 புதினா, தக்காளி சட்னி - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

 எலுமிச்சைப் பழம் - ஒன்று

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

ஒரு பவுலில் பீட்ரூட், கேரட், வெங்காயம், கொத்தமல்லித்தழை, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும். இன்னொரு பவுலில் துருவிய மாங்காய், தேங்காய், உப்பு சேர்த்து தனியாக கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தட்டையை வைத்து அதன் மேல் புதினா, தக்காளி சட்னியை தடவி, ஒரு ஸ்பூன் அளவு பீட்ரூட் கலவையை வைக்கவும். இதன் மேல் ஒரு ஸ்பூன் அளவு மாங்காய் கலவையை வைக்கவும். அதன் மேல் புதினா-தக்காளி சட்னியைத் தடவி, இன்னொரு தட்டையை அதன் மேல் வைத்துப் பரிமாறவும்.

No comments:

Post a Comment